Samsun Solar Solutions — Who We Are
Kumbakonam, Tamil Nadu · Since 2009 கும்பகோணம், தமிழ்நாடு · 2009 முதல்

Who We Are

யார் நாங்கள்?

A small off‑grid experiment during Tamil Nadu's power‑cut years grew into a full-scale solar company — trusted for honest engineering and installations built to last.

தமிழ்நாட்டு மின்வெட்டு காலத்தில் தொடங்கிய ஒரு சிறிய ஆஃப்-கிரிட் முயற்சி, இன்று நம்பகமான பொறியியல் மற்றும் நீடித்து நிற்கும் நிறுவல்களுக்குப் பெயர் பெற்ற முழு அளவிலான சோலார் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

In life, there's always a different approach to any solution — solar power is no different. We plan things our own way: making solar solutions affordable and sustainable, choosing appliances that are locally serviceable and long‑lasting. By building energy‑efficient design into every installation, we've reduced solar installation costs by up to 70%. That's the secret behind Samsun Solar's growth — effective design, innovative approaches, higher‑quality components, and dependable after‑sales service, making every Samsun Solar installation of the highest class.

வாழ்க்கையில் எந்தத் தீர்வுக்கும் எப்போதும் ஒரு வேறுபட்ட அணுகுமுறை இருக்கும் — சூரிய மின் உற்பத்தியிலும் இது வேறுபடவில்லை. நாங்கள் எங்கள் சொந்த முறையில் திட்டமிடுகிறோம்: சோலார் தீர்வுகளை மலிவானதாகவும் நிலையானதாகவும் மாற்றி, உள்ளூரில் சேவை பெறக்கூடிய, நீண்ட காலம் நீடிக்கும் உபகரணங்களைத் தேர்வு செய்கிறோம். ஒவ்வொரு நிறுவலிலும் ஆற்றல்-திறன் வடிவமைப்பைச் சேர்த்து, நிறுவல் செலவை 70% வரை குறைத்துள்ளோம். இதுவே சாம்சன் சோலாரின் வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் — திறமையான வடிவமைப்பு, புதுமையான அணுகுமுறைகள், உயர்தர கூறுகள், நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவை.

Our Journey

எங்கள் பயணம்

Sixteen years, one field at a time.

பதினாறு ஆண்டுகள், ஒவ்வொரு அடியாக முன்னேற்றம்.

2009 — Where it began

2009 — தொடக்கம்

During Tamil Nadu's harshest power‑cut years, we began installing small Off‑Grid systems using 100W solar panels and compact 12V PWM charge controllers.

தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு நிலவிய காலகட்டங்களில், 100 வாட் சோலார் பேனல்கள் மற்றும் சிறிய 12V PWM சார்ஜ் கன்ட்ரோலர்களைக் கொண்ட ஆஃப்-கிரிட் அமைப்புகளை நிறுவத் தொடங்கினோம்.

Proof it worked

முதல் வெற்றி

We charged existing home UPS units and batteries using three 100W panels and one PWM controller — successfully generating electricity for the first time.

ஏற்கெனவே வீட்டில் இருந்த UPS மற்றும் பேட்டரிகளை, மூன்று 100 வாட் பேனல்கள் மற்றும் ஒரு PWM கன்ட்ரோலர் மூலம் சார்ஜ் செய்து, வெற்றிகரமாக மின்சாரம் உற்பத்தி செய்து காட்டினோம்!

Scaling up

அளவை உயர்த்துதல்

Following this success, we grew Off‑Grid capacity from 0.3 kW to 5 kW, supporting many homes and businesses.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஆஃப்-கிரிட் திறனை 0.3 கிலோவாட்டிலிருந்து 5 கிலோவாட் வரை அதிகரித்து, நிறைய வீடுகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் உதவினோம்.

1000+ solar pumps

1000+ சோலார் பம்புகள்

With formal training, we brought solar pump sets to fields without electricity, completing over 1,000 installations across and around Tamil Nadu.

முறையான பயிற்சி பெற்று, மின்சார இணைப்பு இல்லாத வயல்வெளிகளில் சூரியசக்தி பம்பு செட்களை அமைத்து, 1000-க்கும் மேற்பட்ட சோலார் பம்புகளை நிறுவி முடித்துள்ளோம்.

PM Surya Ghar

பிரதமமந்திரி சூர்யா கர்

As we grew, we began installing residential Solar On‑Grid systems under the PM Surya Ghar scheme, backed by bank financing and central government subsidy.

தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகையில், 'பிரதமமந்திரி சூர்யா கர்' திட்டத்தின் கீழ் வீட்டு உபயோகத்திற்கான ஆன்-கிரிட் அமைப்புகளை, வங்கிக் கடன் மற்றும் மத்திய அரசு மானியத்துடன் நிறுவி வருகிறோம்.

Advanced commercial systems

மேம்பட்ட வணிக அமைப்புகள்

We avoided On‑Grid systems for small commercial units, as they rarely delivered real profit. Today, Hybrid Lithium Ferrous battery systems pay off far better, so we now install advanced Off‑Grid Battery Energy Storage Systems for businesses.

சிறிய வணிக நிறுவனங்களுக்கு ஆன்-கிரிட் அமைப்புகளை நிறுவுவதைத் தவிர்த்தோம்; ஏனெனில் அவை லாபம் ஈட்டித் தரவில்லை. இப்போது ஹைபிரிட் லித்தியம் பெரஸ் பேட்டரி அமைப்புகள் அதிக லாபம் தருவதால், மேம்பட்ட ஆஃப்-கிரிட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை நிறுவி வருகிறோம்.

What Comes Next

அடுத்து என்ன?

Harnessing wind

காற்றாலை ஆற்றல்

Our journey continues towards harnessing green power from natural wind.

பசுமை ஆற்றலை இயற்கையாக வீசும் காற்றிலிருந்து உற்பத்தி செய்யும் திசையில் எங்கள் பயணம் மேலும் தொடர்கிறது.

Rainwater & solar gutters

மழைநீர் & சோலார் வடிகால்

We help harvest rainwater for drinking purposes and fit rain‑gutter systems suited for solar panel installations.

குடிநீருக்காக மழைநீரைச் சேகரிக்கவும், சூரிய மின்சக்தித் தகடுகளுக்கு ஏற்ற மழைநீர் வடிகால் அமைப்புகளைப் பொருத்தவும் நாங்கள் உதவுகிறோம்.

We're grateful for the trust our customers place in us, and remain committed to bringing reliable, high‑quality solar solutions to every home and business we serve.
எங்கள் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. நாங்கள் சேவை செய்யும் ஒவ்வொரு வீட்டிற்கும் நிறுவனத்திற்கும் நம்பகமான, உயர்தர சோலார் தீர்வுகளை வழங்க தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம். எங்கள் முயற்சிகள் வெற்றிபெற தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்.
Enquire Nowவிசாரிக்க

Always Clean Energy

Absorb the Sun rays for generating electricity.

Easy Installation

Enjoy the limitless power of Solar Technology at Home.

Low Installation Costs

Save more than 20% on Electricity Bills.

Resilience & Durability

With Solar Panels, always have your own power.

Multiple Applications

Save Environment and Secure Energy for your Home.

Renewable Energy

An Energy source that can never be deplected.

Hey!

Let us Help you Save Money